news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

சென்னை

10

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
anbli main

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம் கே எஸ் சேயற்கை நுண்ணறிவு பயிற்சி மையத்திற்கான இணையதளத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். மேலும் அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் 3,560 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் அடிப்படை பயிற்சி முடித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம். தற்போது மாதிரி பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி அளித்துள்ளது போல், அடுத்த கட்டமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

ஸ்மார்ட் வகுப்புகள், ஹைடெக் லேப் வசதிகள்
தமிழ்நாட்டில் உள்ள 28,937 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப் வசதிகள் உள்ளது என்றும் எனவே நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்காக டிஎன் ஸ்பார்க் என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம் . செயற்கை நுண்ணறிவில் மாணவர்கள் வல்லுனராக முடியும் என தெரிவித்தார்.சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம் கே எஸ் சேயற்கை நுண்ணறிவு பயிற்சி மையத்திற்கான இணையதளத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். மேலும் அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் 3,560 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் அடிப்படை பயிற்சி முடித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம். தற்போது மாதிரி பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி அளித்துள்ளது போல், அடுத்த கட்டமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.


ஸ்மார்ட் வகுப்புகள், ஹைடெக் லேப் வசதிகள்
தமிழ்நாட்டில் உள்ள 28,937 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப் வசதிகள் உள்ளது என்றும் எனவே நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்காக டிஎன் ஸ்பார்க் என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம் . செயற்கை நுண்ணறிவில் மாணவர்கள் வல்லுனராக முடியும் என தெரிவித்தார்.

இளைய சமுதாயத்திற்கு லேப்டாப்
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் இருப்பதே பெரிய விஷயமாக இருந்தது. கம்ப்யூட்டர் கணக்கு பார்ப்பதற்கான பெரிய கால்குலேட்டர் என நினைத்திருந்தோம். நான் பள்ளியில் படிக்கும் போது எனது வகுப்பில் 147 மாணவர்கள் இருந்தோம். அப்பொழுது கம்ப்யூட்டரை கண்காட்சி பார்த்தோம். அந்த கம்ப்யூட்டரில் உள்ள பட்டனை அழுத்தி பார்த்து ஏதாவது ஸ்கிரீனில் தெரிகிறதா என பார்த்தோம். ஆனால் தற்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைய சமுதாயத்திற்கு லேப்டாப் கொடுத்துள்ளார்.


அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி
தற்பொழுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து சாஃப்ட்வேர் உற்பத்தி செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது அதற்கான வளர்ச்சியை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. இது பள்ளி மாணவர்களுக்காகவே செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பள்ளியளவில் சொல்லிக் கொடுத்து விட்டால் கல்லூரிக்கு செல்லும் போது எளிதாக இருக்கும் என அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.

நுண்ணறிவு பயிற்சி மையத்துடன் இணைந்து பயணிப்போம்
இந்த ஐந்து ஆண்டுக்கு மட்டும் இல்லாமல் அடுத்த ஐந்தாண்டுக்கும் சேர்த்து சிந்தித்தவர் நம் முதல்வர் அடுத்த தலைமுறையை உருவாக்கும் முதல்வராக இருக்கிறார். நம்மளுடைய இரு கண்களாக இருப்பது கல்வியும் மருத்துவம் என்று முதல்வர் சொல்வார். அது சொல் மட்டுமல்லாமல் செயலாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களின் முக்கிய திட்டமாக காலை உணவு திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை மக்களைத் தேடி மருத்துவம் என இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் இருக்கிறது. அதேபோல் தான் எம்.கே.எஸ். செயற்கை நுண்ணறிவு பயிற்சி மையத்துடன் இணைந்து பயணிப்போம் என தெரிவித்தார்.

இதற்கு காரணம் அமைச்சர் அன்பில்தான்
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்,இந்திய அளவிலான உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47 சதவீதமாக உள்ளது என்றும் இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கையின் சதவீதம் 28.4 சதவீதம்.இதற்கு காரணம் அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி என பெருமையுடன் கூறினார்.

நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பு
இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கையிலும் தமிழ்நாடு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது, எனவே இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையிலும், தேர்ச்சியிலும் மகத்தான சாதனை படைத்திருக்கிறது அரசு பள்ளிகளில் பயின்ற ஐந்து மாணவிகள் ஜப்பானில் வருடத்திற்கு 21 லட்சம் ரூபாய் பணியில் உள்ளார்கள். இது நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பு என பெருமிதம் தெரிவித்தார்.

நுண்ணறிவு அலையை நாம் சந்தித்தே ஆக வேண்டும்
விவசாய அலை, தொழில்துறை அலை, மின் அலையை சந்தித்து விட்டோம். தற்போழுது செயற்கை நுண்ணறிவு அலையை நாம் சந்தித்தே ஆக வேண்டும், இதில் வெற்றி பெற வேண்டும், மடிக்கணினி கொடுப்பது சினிமா பார்ப்பதற்காக அல்ல .செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கும், தெரிந்து கொள்வதற்கும். அதனால்தான் கல்லூரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கியுள்ளோம் என கூறினார். 

Related Link
விரைவில் 3 புதிய பயணிகள் படகுகள்

விரைவில் 3 புதிய பயணிகள் படகுகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோபி நயினார் இயக்கும் படத்திற்கு காலணி என பெயர்

0
3 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved