Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 10:41 AM
By: Manigandan Raja

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து ஈரோட்டுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட சுமார் ஒரு டன் அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
குட்கா கடத்தலுக்காக மினி லாரியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதில் குட்கா கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் லாரி ஓட்டுனரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சந்தேகம் படும்படி வந்த ஒரு மினி ஆட்டோ இன்னோவா காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved