news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐ.ஜி.அலுவலக பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
tv

Also Watch

tv

Read this

ஐ.ஜி.அலுவலக பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

திருப்புவனம், சிவகங்கை

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஐ.ஜி அலுவலக பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ஆறு கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அடுத்தடுத்து அரங்கேறும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.

திருப்புவனம் கலைஞர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி, நாக சுந்தரி தம்பதியர். மணி சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் அவரது மனைவி நாகசுந்தரி மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தற்சமயம் அலுவலக நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ள நிலையில் இருவரும் திருமணம் ஆகி வேறு பகுதிகளில் வசித்து வருகின்றன.

அண்மையில் கணவர் மணிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி நாகசு சுந்தரியும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் உள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஆறு கிலோ அளவிலான வெள்ளிப் பொருட்களை திருடி சென்றுள்ளன. இன்று காலை நாகசுந்தரி வீட்டில் வந்து பார்க்கும்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக திருப்புவனம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 21ஆம் தேதி மன்னர் நகர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் புவனேந்திரன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து 45 சவரன் தங்க நகைகள் 45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற நிலையில் நான்கு நாள் இடைவெளியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினரின் மெத்தன பொக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related Link
ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் புகுந்த கரடி

ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் புகுந்த கரடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

0
6 mins agoshare
கும்பகோணம் பேருந்து நிலையம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved