Also Watch
Read this
By: Manigandan Raja

பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள் :
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னை,கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துள்ளனர் .
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து போதுமான திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி காரைக்கால் போன்ற பல்வேறு ஊர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் காலையிலிருந்து ஏராளமான பயணிகள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.