வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் அருகே ஜும் ஆ பள்ளிவாசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்லாது வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து ஏராளமான பல்வேறு சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர். இனமென பிரிந்தது போது.... அவர்கள் பள்ளிவாசலுக்காக பழங்கள், பீரோ, ஃபேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து அசத்தினர். அவை அனைத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் இன் முகத்துடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு அவர்களை வரவேற்றனர். மாற்று மதத்தினர் நெகிழ்ச்சிபள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பல்வேறு சீர்வரிசை வழங்கி இருப்பது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். Related Link "மௌனம் பேசியதே" ரீ-ரிலீஸ்