'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 8ஆவது நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இடைநிலை ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து, வலுக்கட்டாயமாக ஒரு காலை தூக்கி வாகனத்தில் ஏற்றியதால் அவர் வலியில் கதறினார்.அதேபோல், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராடி வரும் நிலையில், ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.