Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளம்பெண்ணை கொலை செய்து, உடலை பொதுவெளியில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்கோ வளாகத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கழனிவாசல் பட்டியை சேர்ந்த சுகன்யா என்பதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்ததும் தெரிந்தது.
மேலும் அவரின் செல்போனை கைப்பற்றி ஆராய்ந்ததில், கடைசியாக ஆண் ஒருவருடன் பேசியது தெரிய வரவே,
அவர் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved