Also Watch
Read this
By: Manigandan Raja

திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் :
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வரலாற்று சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற பிரான்மலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆண்ட பகுதியில் திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 5 கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்டதும்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த (ஏப்-21) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் பத்து நாள் பெருந்திருவிழா விமர்சையாக
துவங்கியது.
அதை தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படியில் சுவாமி திருவீதி உலாவும் ஐந்தாம் நாள் திருக்கல்யாண உற்சவமும்,ஏழாம் நாள் முல்லைக்கு தேர் ஈந்தல்,படி அரிசு அளப்பு வைபவமும் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் இன்று திருத்தேரோட்ட விழாவில் அதிகாலை சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்து தேர்களில் விநாயகர் முருகர் பிரியாவிடை உடனான திருக்கொடுங்குன்றநாதர் அன்னை குயிலமுதநாயகி அம்மன் ஆகியோர் தனித்தனி நான்கு பெரிய தேர்களில் எழுந்தருளினர்.
சிறிய சப்பரத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களில் சுவாமிகள் எழுந்தருளிய திருத்தேர்களை மாலை 5.30 மணியளவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தேர் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள், பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து சரியாக மாலை 5.30 மணி அளவில் திருத்தேர் ஒன்றன் பின் ஒன்றாக நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் தங்கள் உறவுகள் மீது வர்ணம் அடித்தும் மாம்பழம்,வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை சூறைவிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் பிரான்மலை சுற்றுவட்டார 18 பட்டி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கொடுங்குன்றநாதர் சுவாமி அருள் பெற்று சென்றனர்.