Also Watch
Read this
By: Manigandan Raja

ஏரல் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழை :
கடந்த பல நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. வெயிலில் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பக்கத்து மாநிலமான கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகம் பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வந்தார்கள். இந்த நிலையில் ஸ்ரீ வைகுண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று திடீரென்று சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கம் குறைந்தால் மகிழ்ச்சி அடைந்தனர்.