Also Watch
Read this
By: Manigandan Raja

கல்லார் எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தன :
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் இன்று சோலையார் கல்லார் எஸ்டேட் பகுதியில் இடியுடன் கூடிய சூறாவளி காற்றால்.
இரண்டு மரங்கள் மின்கம்பம் மீது விழுந்து சோலையார் பஜார் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மின்கம்பத்தால் மின்சாரம் ஓயர்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இரண்டு மரங்களும் சாய்ந்தது நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில்.
அப்பகுதியில் சாலை ஓரங்களில் மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இது போன்ற மழைக்காலங்களில் காற்றுடன் கனமழை பெய்வதால் மரங்கள் விழுந்து அப்பகுதியில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாடும் போது உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் தனியார் நிறுவனம். வனத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள விபத்துக்கு உண்டான மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் வேருடன் பல மரங்கள் சாய்ந்த நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.