Also Watch
Read this
By: Fyrose Banu

கிராமப்புறங்களில் பெண்கள் உடலில் ஏற்படும் நீர் கட்டிகளையோ அல்லது பால் கட்டிகளையோ சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தாமல் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் நாம் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என நடிகை நளினி தெரிவித்தார்.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிலினிக்கல்ஸ் மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக புற்றுநோய் சிகிச்சை மையமான 'சகி' என்ற மையத்தை பிரபல நடிகை நளினி குத்து விளக்கேற்றி ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

'வருமுன் காப்பதே' சிறந்தது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை நளினி, பெண்கள் பெரும்பாலும் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால், தற்போது தொடங்கப்பட்டுள்ள 'சகி' மையத்தில் மாத்திரைகள் மூலமே குணப்படுத்தும் வசதிகள் உள்ளன என்றும் 'வருமுன் காப்பதே' சிறந்தது என கூறினார். 

தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்
தமிழக அரசு 14 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது என கூறிய நளினி அனைத்து பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆலோசித்து வருவது வரவேற்கத்தக்கது என்றும், கலைஞர்களுக்கு சமூகப் பொறுப்பு உள்ளது என்பதால் இனி வரும் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் மார்பக புற்றுநோய் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பெண்களே அலட்சியப்படுதாதீர்கள்...
கிராமப்புறங்களில் பெண்கள் உடலில் ஏற்படும் நீர் கட்டிகளையோ அல்லது பால் கட்டிகளையோ சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்துகின்றனர் என தெரிவித்த அவர், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் நாம் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்ன கூறினார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved