செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது, அதனை செய்தி எடுக்க சென்ற செய்தியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல்லாவரம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.