news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் MLA இசக்கி சுப்பையா பேச்சு
tv

Also Watch

tv

Read this

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் MLA இசக்கி சுப்பையா பேச்சு

நெல்லை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL ADMK

MLA இசக்கி சுப்பையா பேச்சு :

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக கூட்டணி கட்சி ஒருங்கிணைப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையாவுக்கு செண்டா மேளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

தொடர்ந்து திருக்குறளில் சாதித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ சிக்கி சுப்பையா பரிசுகள் வழங்கி கௌரவித்தார் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இந்த அம்பாசமுத்திரம் தொகுதி அம்மாவின் கோட்டை என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கும்போது நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை திமுக நிறைய வாக்குறுதியை கொடுத்தார்கள்.

ஆனால் ஒரு வாக்குறுதியை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை ஆனால் தற்போது நம்முடைய கூட்டணிகள் பலமாக உள்ளது.

அம்மாவுடைய கோட்டையாக இருக்கக்கூடிய இந்த இடத்தில் செயல்வீரர்கள் கூட்டம் தேவையா என கேட்கலாம் ஆனால் நம் கட்சிக்காரர்கள் கோட்டையை சந்திக்கணும் என்பதற்காக தான் இந்தக் கூட்டமே தவிர எப்படி வேலை செய்யணும் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஏனென்றால் அவர்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள் தேர்தல் பணிகள் 75% வரை வேலை முடிந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள்

75% அல்ல 100% முடிந்துவிட்டது. இந்த தொகுதி அம்மாவின் கோட்டை எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இங்கு ஒரு களிமண்ணை நிப்பாட்டினால் கூட இரட்டை இலையில் வெற்றி பெற்று வருவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை ஊழலுக்கு ஒரே ஒரு அடையாளம் திமுக தான்.

ஆட்சி அமைத்த மூன்றாவது மாதத்திலேயே நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் என அவர் கட்சியை பற்றி அவரே சொல்கிறார் அநீர் ஊழல் செய்தவர் யார் என்றும் சொல்கிறார் முதலமைச்சர் மகன் மற்றும் மருமகன் என அவரே பேட்டி கொடுக்கிறார் என பேசினார்.

Related Link
களைக்கட்டிய மஞ்சுவிரட்டு போட்டி

களைக்கட்டிய மஞ்சுவிரட்டு போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 30 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved