Also Watch
Read this
By: Fyrose Banu

மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கொட்டாம்பட்டி அருகே வெள்ளினிப்பட்டி கிராமத்தில் ஆண்டிகருப்பர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சதுரகிரி மலை அடிவராத்தில் இன்று மஞ்சுவிரட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 300 மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் பங்கேற்பு
முன்னதாக கிராம பெரியவர்கள் ஜவுளி பொட்டலங்களை சுமந்து வந்து காளைகளுக்கு அணிவித்தினர். தொடர்ந்து காளைகள் அவிழ்துவிடப்பட்டு வயல்வெளி பகுதிகளில் சீறி பாய்ந்தன. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300 மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. 
2பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்
அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முற்பட்டு இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மஞ்சுவிரட்டு போட்டியில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீஇவிர சிகிச்சை பிரிவில் அனுமதிபட்டுள்ளனர்.