news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews என் பையன ஏன்டா குடிக்க வைச்சி கெடுக்கிற?
tv

Also Watch

tv

Read this

என் பையன ஏன்டா குடிக்க வைச்சி கெடுக்கிற?

நாமக்கல்

334

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mnk 1

என் பையனை ஏன்டா குடிக்க வைச்சி கெடுக்கிறேன்னு கேட்ட தந்தையை மது பாட்டிலால் நடு மண்டையை பிளந்த மதுபோதை இளைஞன் மீது புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்கு போராடிய காட்சிகளும், அப்பாவை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கதறிய மகனின் காட்சிகளும் காண்போரை கண்கலங்க வைத்தது.

மூன்று பார்களிலும் சட்டவிரோத மது விற்பனை

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் 3 அரசு மதுபான கடைகளுடன் கூடிய பார் செயல்பட்டு வருகிறது. இரவு 10 மணியுடன் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டாலும் இந்த மூன்று பார்ங்களிலும் சட்டவிரோத மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சக்திவேல். இருவரும் ஒன்றாக நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை மகன் சக்திவேல், தவறான நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்துவிட்டு செலவு செய்வதை பலமுறை முதியவர் சேகர் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரத்தில் கூச்சலிட்ட தந்தை
இந்நிலையில் தன் மகன் சக்திவேல் நள்ளிரவு வரை வீட்டிற்கு வராத நிலையில் மகனை தேடி அரசு மதுபான கடை பாருக்கு வந்த முதியவர் சேகர் தன் மகன் அதே பகுதியில் RMC காலனியை சேர்ந்த சிவா என்பவனுடன் மதுகுடித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டு உள்ளார்.

தன் மகனின் வாழ்க்கையை சீரழிப்பதாக கதறிய தந்தை
தொடர்ந்து கூலி வேலைக்கு செல்லும் மகனை அழைத்து வந்து தினந்தோறும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கொடுத்து தன் மகனின் வாழ்க்கையை சீரழிப்பதாக கூறி அருகே இருந்த சிவாவை தகாத வார்த்தைகளால் திட்டி சத்தம் போட்டுள்ளார்.

போதை தலைக்கேறிய இளைஞன் செய்த கொடூரம்

பின்னர் தன் மகனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு புதிய பஸ் நிலையம் உள்ளே சென்ற நிலையில், இதனால் ஆத்திரத்துடன் மது பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்த சிவா, போதை தலைக்கேறிய நிலையில் முதியவர் சக்திவேலின் தலையில் மதுபாட்டிலால் நடு மண்டையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் முதியவர் அங்கேயே கீழே விழுந்தார்.

படுகாயத்துடன் சரிந்து விழுந்த தந்தை
தன் அப்பாவை அடிப்பதை கண்ட சக்திவேலுக்கும், சிவாவுக்கு கைகலப்பு ஏற்பட்டதில் சக்திவேல் கையிலும் பாட்டிலை எடுத்து அடித்து காயப்படுத்திய நிலையில், அங்கு கும்பல் கூடி தகராறை தடுத்துள்ளனர்.ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்த அப்பாவிற்க்கு தண்ணீர் கொடுத்து அப்பா அப்பா என கதறிய சக்திவேல் "ஏண்டா எங்க அப்பாவையே அடிச்சுட்டு என்னையும் அடிச்சிட்டியா டா, உன்ன சும்மா விடமாட்டேன் என அழுது கொண்டே அப்பாவை மடியில் படுக்க வைத்த தண்ணீர் கொடுத்த காட்சிகள் கண்போரை கண் கலங்க வைத்தது.

புகார் அளித்தும் போலீசார் வரவில்லை
மேலும் சம்பவம் குறித்து ராசிபுரம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட நிலையில் காவல் துறையினர் ஒருவர் கூட அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. பொதுமக்களின் உதவியுடன் தனது அப்பாவை மீட்ட சக்திவேல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து போதை இளைஞர் தகராறு செய்ததாகவும் கூறப்படும் நிலையில் இதுவரை காவல் துறையினர் எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சட்டவிரோத மதுவிற்பனையால் தொடரும் அவலம்
கடந்த சில மாதங்களில் புதிய பஸ் நிலையத்தில் இதேபோல் கஞ்சா மற்றும் மதுபோதையில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், பொது மக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் குறித்து பலமுறை செய்திகள் வெளிவந்த நிலையில் இதுவரை சட்ட விரோத மது விற்பனை செய்யும் சந்து கடைகள் மீது இராசிபுரம் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

Related Link
படு வைரல் ஆன பார்த்திபன் வீடியோ

படு வைரல் ஆன பார்த்திபன் வீடியோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 6 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved