Also Watch
Read this
By: Fyrose Banu

நீலகிரியில் நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்படும் பஃபே என்ற நடைமுறையை நிறுத்து போவதாக ஹோட்டல் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போரின் காரணமாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்
குறிப்பாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
ஹோட்டல்களில் வழங்கப்படும் பஃபே நிறுத்தம்
இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஹோட்டல் சங்கங்கள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் வழங்கப்படும் பஃபே என்ற நடைமுறை நிறுத்தப்படுவதாகவும் மிக குறைந்த அளவே உணவுகள் சமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத பட்சத்தில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved