கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு இடமே தேர்வு செய்யாமல் எப்படி அடிக்கல் நாட்டுவீர்கள் என்றும், 10 ஆண்டுகளாக ஒரே துறையில் இருக்கும் அதிகாரி பொய் சொல்லலாமா? எனவும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவரை திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் மேடையிலேயே கடிந்து கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பங்கேற்று பேசிய அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் கூட்டுறவு சங்க கட்டம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குணா ஐய்யப்பதுரை தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறினார்.