Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 03:02 PM
By: Manigandan Raja

புதுச்சேரியில் வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் கூட்டமைப்பினர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1,300 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி
வரும் நிலையில், அவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி வவுச்சர் ஊழியர்கள் 15 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், 10 ஆண்டு பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்வதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை பணிநிரந்தரம் செய்யாததால் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved