news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்
tv

Also Watch

tv

Read this

மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்

கயத்தாறு, தூத்துக்குடி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மூளைச்சாவு அடைந்த நபர்

உடல் உறுப்புகள் தானம் : 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சார்ந்தவர் அசோக்ராஜ் (48) இவர் அப்பகுதியில் மைக் செட் நடத்தி வருகிறார் மனைவி கலைச்செல்வி(45) பாண்டித்துரை(26) கிருஷ்ணகுமார் (25) செந்தில்குமார் (19) என்ற மூன்று மகன்களும் கிர்த்திகா என்ற ஒரு மகளும்உள்ளனர். 

கடத்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு சக்கர வாகனத்தில் திருநெல்வேலியில் நர்சிங் படித்தவரும் மகள் கிர்த்திகாவை பார்ப்பதற்காக திருநெல்வேலி சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற பைக் மற்றொரு பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அசோக்ராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அசோக்ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக நேற்று மாலை மருத்துவர்கள் அசோக்ராஜ் உறவினர்களிடம் தெரிவித்தனர் மேலும் அசோக்ராஜின் உடல் உறுப்பை தானம் செய்வதாக மனைவி மற்றும் குழந்தைகள் சம்மதத்துடன் இன்று காலை 10 மணிக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அசோக் ராஜ் உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு மாலை மணியளவில் உடலை கொண்டு வந்தனர் மாவட்டம் வருவாய் அலுவலர் குருசந்திரன் மற்றும் கயத்தாறு காவல் நிலைய துணை ஆய்வாளர் பழனிச்சாமி தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Link
ஸ்ட்ரெக்சரில் மரங்களை ஏற்றி சென்ற ஊழியர்கள்

ஸ்ட்ரெக்சரில் மரங்களை ஏற்றி சென்ற ஊழியர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் தடை - கருப்பு ஆடுகள் காரணமா?

2
2 hrs 32 mins agoshare
CTR Nirmal kumarbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved