news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews நியூயார்க் நகரவாசிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட்டுகள்
tv

Also Watch

tv

Read this

நியூயார்க் நகரவாசிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட்டுகள்

New York

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
FIFA கால்பந்து போட்டிகள்

நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி நடவடிக்கை :

அடுத்த மாதம் தொடங்கும் fifa கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை, மானிய விலை டிக்கெட்டுகள் மற்றும் இலவசப் போக்குவரத்து மூலம் சென்று நியூயார்க் மக்கள் பார்த்து ரசிக்க அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த நியூயார்க் நகரவாசிகள் உலகக் கோப்பையை அனுபவிப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று ஜோரன் மம்தானி கூறினார்.

ஆப்கானில் குழந்தை திருமணத்துக்கு ஆதரவு அளிக்கும் சட்டம் :

ஆப்கானிஸ்தானில், குழந்தை திருமணத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய குடும்ப சட்டத்துக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தால், ஏழை குடும்பங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி, தங்களின் இளம் மகள்களை குழந்தை திருமணத்துக்கு தள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித் இஸ்லாமிய மதத்திற்கு முரணானவர்களின் வழக்கமான விமர்சனம்' என தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி :

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 90 பேர் சுரங்கத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 16 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5000 அமெரிக்க வீரர்கள் :

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக, அறிவித்த சில வாரங்களிலேயே, போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5 அயிரம் வீரா்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்   அறிவித்தார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், அண்மையில் போலந்து அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கரோல் நவ்ராக்கியின் வெற்றி மற்றும் அவருடனான சுமுகமான உறவின் அடிப்படையில், அந்நாட்டுக்குக் கூடுதல் வீரா்களை அனுப்ப முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டாா்.

இரு வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு :

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் கடலோரப் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். இரு வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் 19 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் எரிபொருள் தட்டுப்பாடு :

நேபாளத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் காரணமாக அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களின் புதிய பதிவுகளையும் அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்த கவலைகள் மற்றும் எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சங்களுடனும் இந்த முடிவு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரூ.102 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கு :

102 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இங்கிலாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட் நிலையில், அவர்களிடம் இருந்து 300 கிலோகிராமுக்கும் அதிகமான கோகைனும், 60 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயினும் கைப்பற்றப்பட்டன.

Related Link
ஒரே நாளில் அதிகம் பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை

ஒரே நாளில் அதிகம் பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

3
48 mins agoshare
Cockroach janta party








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved