Also Watch
Read this
By: Manigandan Raja

ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட 274 மலையேற்ற வீரர்கள் :
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில், 3 இந்தியர்கள் உட்பட 274 மலையேற்ற வீரர்கள் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளனர். ஒரே நாளில் இத்தனை பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது இதுவே முதல்முறை என நேபாள மலையேற்ற ஆப்பரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு முன், 2019 மே 22 ல் ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்ததே சாதனையாக இருந்தது.
"Barbie Girl" பாடல் புகழ் "Aqua" இசைக்குழு பிரிவதாக அறிவிப்பு :

"Barbie Girl" என்ற உலகப் புகழ்பெற்ற பாடலைத் தந்த "Aqua" இசைக்குழு, 30 ஆண்டுகள் வெற்றிகரமான இசைப் பயணத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகப் பிரிவதாக அறிவித்துள்ளது.
லீன் நைஸ்ட்ராம் ((Lene Nystrøm)), ரெனே டிஃப் ((René Dif)) மற்றும் சோரென் ராஸ்டெட் ((Søren Rasted)) ஆகிய உறுப்பினர்கள், இனி குழுவாக இணைந்து நேரடி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோமென கூட்டாக அறிவித்துள்ளனர்.
தாங்கள் உருவாக்கிய பாரம்பரியத்தையும், இசை மீதும் கொண்டுள்ள அன்பையும் பாதுகாக்கும் நோக்கில், இந்த முடிவை எடுப்பதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யுரேனியம் கையிருப்பு நாட்டை விட்டு வெளியேறக்கூடாது :

செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைகளில், டிரம்ப் விதித்த முக்கிய கோரிக்கையை ஈரான் நிராகரித்ததாக பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய அங்கமான, ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு அந்நாட்டில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று அதிபர் டிரம்ப் முன்னதாக இஸ்ரேலுக்கு உறுதியளித்திருந்தார்.
இராணுவத் தயார்நிலையில் அரசு முழு அர்ப்பணிப்பு வழங்கும் :

நாட்டின் இராணுவத் தயார்நிலையில் தனது நிர்வாகம் முழுமையான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவத் தயார்நிலை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட உயர்மட்டப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி அவர்களை ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தனது முழுத் திறனையும் கொண்டு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
உலக நாடுகளின் செயல்பாடுகள் அதிபர் டிரம்புக்கு ஏமாற்றமே :
ஈரான் விவகாரத்தில் உலக நாடுகளின் செயல்பாடுகள் அதிபர் டிரம்புக்கு ஏமாற்றம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதிலும், ஈரான் உலகிற்கு ஒரு அச்சுறுத்தல் என்பதிலும் நேட்டோவில் உள்ள பல நாடுகள் அமெரிக்காவிடம் உடன்படுவதாக தெரிவித்த மார்கோ ரூபியோ, ஆனால் அதற்கு எதிராக அவர்கள் எதையும் செய்ய மறுப்பதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved