news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews யானைகள் மோதலில் தமிழக பெண் உயிரிழந்த விவகாரம்
tv

Also Watch

tv

Read this

யானைகள் மோதலில் தமிழக பெண் உயிரிழந்த விவகாரம்

துபாரே முகாம், கர்நாடகா

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
துபாரே முகாம்

வன விலங்கு சரணாலயங்களுக்கு கர்நாடகா கடும் கட்டுப்பாடு :

  • கர்நாடகா மாநில துபாரே முகாம் 2 யானைகள் மோதி கொண்டபோது அருகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்த நிகழ்வை அடுத்து, வன விலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.

திறந்தவெளி வாகனங்களில் உடையாத கண்ணாடிகள், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும், உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சைப்ரஸ் பயணத்தை தொடர்ந்து இந்தியா வருகை :

சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ், தனது சுற்றுப்பயணத்தின் மும்பை கட்டத்தை முடித்துக்கொண்டு, தலைநகர் டெல்லி சென்றடைந்தார். டெல்லி சென்ற சைப்ரஸ் அதிபரை மரியாதை அணிவகுப்புடன் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் அஜய் தம்டாவால் வரவேற்றார்.

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் :

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் இனி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் நேரடியாக எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என அம்மாநில பாஜக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான புதிய விதியும் அமலுக்கு வந்துவிட்டதாக அவர் கூறினார்.

கொலை வழக்கில் பரோலில் வெளிவந்த நடிகர்  :

குஜராத்தில் கொலை வழக்கில் பரோலில் வெளிவந்து சுமார் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஹேமந்த் நாகின்தாஸ் புருஷோத்தம்தாஸ் என்பவர்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு பரோல் வழங்கியது. 30 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்த பின்னரும், ஹேமந்த் நாகின்தாஸ் மீண்டும் சரணடையாமல் தலைமறைவானார்.

ஓடும் கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து :

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் ஓடும் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கார்கள் எரிந்து சாம்பலாகின. நிஜாமாபாத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கி கார்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, தூப்ரான் பெயர் கம்பெனி அருகிலுள்ள மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

தீ வேகமாகப் பரவியதில், கொள்கலனிலிருந்த சுமார் 8 சொகுசு கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

Related Link
கரப்பான் பூச்சியைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது?

கரப்பான் பூச்சியைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது?

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
7 hrs 17 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved