news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரூர் சித்தலவாய் ரயில் நிலைய கவுண்டரில் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

கரூர் சித்தலவாய் ரயில் நிலைய கவுண்டரில் கொள்ளை

சித்தலவாய் , கரூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சித்தலவாய் ரயில் நிலைய கவுண்டரில் கொள்ளை

கவுண்டரில் கொள்ளை   : 

கரூர் மாவட்டம் சித்தலவாய் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் நிலைய அதிகாரி திவ்யா பணிக்காக நிலையத்தை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது டிக்கெட் கவுண்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் டிக்கெட் கவுண்டர் அறையின் வெளிப்புற பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பெட்டகத்தை கடப்பாரையால் உடைத்து, மூன்று நாள் வசூல் தொகையான 21 ஆயிரத்து 750 ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


பின்னர் கரூர் மோப்பநாய் லக்கி சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர் கதவு மற்றும் பெட்டகத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தார்.

மேலும் சேலம் உதவி வணிக மேலாளர் மகாராஜன், கரூர் வணிக ஆய்வாளர் செல்வராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Link
'சாவு இப்படியாங்க வரணும்..' நொடியில் பறிபோன பாட்டி உயிர்!

'சாவு இப்படியாங்க வரணும்..' நொடியில் பறிபோன பாட்டி உயிர்!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
7 hrs 15 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved