Also Watch
Read this
By: Manigandan Raja

நொடியில் பறிபோன பாட்டி உயிர் :
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த 76 வயது மூதாட்டியான லெட்சுமி என்பவர் நேற்றிரவு அருகில் உள்ள தனது மகனின் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் அழகியமண்டபம் பகுதியில் வைத்து வீட்டின் முன் உள்ள சாலையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்ற போது.
சாலையில் குளச்சல் பகுதியில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி லெட்சுமி மீது மோதி விபத்துக்குள்ளானது இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் சாலையில் விழுந்த மூதாட்டி லெட்சுமி தலை மீது இருசக்கர வாகனத்தில் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்த மூதாட்டியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற போதை இளைஞர் நிஷாந்த் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போதை இளைஞர் வேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதபதைக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved