மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்படாமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மூட்டைக்கு 55 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். பணம் கொடுத்தாலும் கொள்முதல் செய்ய 20 நாட்களுக்கு மேலாக தாமதப்படுத்துவதால், நெல்மணிகளின் ஈரப்பதம் குறைந்து எடை குறைவதாகவும், இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.