Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 09:20 AM
By: Manigandan Raja

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக
வெள்ளித்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved