ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பொங்கல் பானை விற்பனை மந்தமாக இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். தமிழர்களின் பாரம்பரிய திருவிழான பொங்கல் பண்டிகை வரும் 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தங்களின் வீடுகளில் மண் பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி செலுத்துவர். ஆற்காடு பகுதியில் விதவிதமான பொங்கல் பானைகளை தயாரித்து அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையிலான பொங்கல் பானைகளை மக்கள் பயன்படுத்த கோரினர்.