Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் அக்ரஹாரம் பேருந்து நிறுத்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சாலையா அல்லது மரண குழியா என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் உடனடியாக சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved