கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகருக்குள் செல்ல இலவச பேருந்து வசதிகள் மற்றும் 116 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.