news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெய்வேலி தனியார் அனல் மின் நிலையம் முன்பு போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நெய்வேலி தனியார் அனல் மின் நிலையம் முன்பு போராட்டம்

நெய்வேலி, கடலூர்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Protest

அனல் மின் நிலையம் முன்பு போராட்டம் : 

கடலூர் மாவட்டம் நெய்வேலி ஊத்தங்கல் பகுதியில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரியை பெற்று டாக்கா என்ற தனியார் அனல் மின் நிலையம் மின் உற்பத்தி செய்து வருகிறது இந்த நிலையில் நேற்று பாய்லரில் இருந்து எரி சாம்பல் விழுந்து ஊத்தங்கல் கிராமத்தைச் சார்ந்த மணிவாசகம் வயது 37 என்பவர் துடி துடித்து உயிரிழந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலையும் உயர் இழப்பீடும் வழங்க வேண்டும் என நேற்று மாலை முதல் கிராம மக்கள் உறவினர்கள் உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக தனியார் அனல் மின் நிலையம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நிலையில் தற்போதும் தனியார் அனல் மின் நிலைய வாயில் முன்பு பந்தல் அமைப்பு புவனகிரி எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் கிராம மக்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Link
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டடம் சிதிலம்

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டடம் சிதிலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு

2
4 mins agoshare
2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved