வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலையோரம் உள்ள உணவகத்தில் வாங்கிய பூரியில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த நாகராஜன் சாலையோரம் உள்ள பார்த்திபன் என்பவருடைய உணவகத்தில் இருந்து பூரி வாங்கி சென்றார். இதனை நாகராஜனின் 11 வயது மகள் சாப்பிட்ட போது உள்ளே பல்லி கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.