Also Watch
Read this
By: Web Team

தீபாவளி பண்டிகைக்கு, நேரடியாக வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் வெளியிட்ட அறிக்கை;
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவலை, பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாயுமானவர் திட்டத்தை முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்துமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.