ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று நரசிம்மசாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.