கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் நடைபெற்ற தைத்திருவிழா தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில், அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்டு பச்சை பல்லாக்கில் மேளதாளங்கள் முழங்க பவனி வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். வழி நெடுகிலும் தேர் வலம் வரும் 4 ரத வீதியிலும் எலுமிச்சம் பழம், மாலை, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து அய்யா வழி பக்தர்கள் வழிபட்டனர். Related Link பரதநாட்டிய கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி