news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருத்துறைப்பூண்டி அருகே கருகும் தாளடி நெற்பயிர்கள்
tv

Also Watch

tv

Read this

திருத்துறைப்பூண்டி அருகே கருகும் தாளடி நெற்பயிர்கள்

திருத்துறைப்பூண்டி, திருவாரூர்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Paddy issue

கருகும் நெற்பயிர்கள் : 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை சம்பா நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தாளடி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது தாளடி நெல் பயிரானது 60 முதல் 70 நாள் பயிராக இருந்து வருகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நாணலூர் விளக்குடி கடியாச்சேரி கொத்தமங்கலம் வங்க நகர் மருதவனம் மாங்குடி ஓவரூர் உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய பாசன ஆறாக விளங்கக்கூடிய முல்லையாறு புதுப்பாண்டியாறு மற்றும் பழம் பாண்டி ஆறு ஆகிய ஆறுகளில் தற்பொழுது குறைவான அளவில் தண்ணீர் செல்வதால்.

போதுமான தண்ணீர் இன்றி சுமார் 10,000 ஏக்கர் பரப்பரவிலான தாளடி நெல் பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டாவது முறையாக விதைப்பு செய்து பயிர்களை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது தண்ணீர் இன்றி நெல் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் எஞ்சின் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் வாடகைக்கு எஞ்சின் எடுத்தால் மணிக்கு 250 ரூபாய்க்கு மேல் டீசல் செலவு ஏற்படுவதாகவும் இதனால்
விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே முல்லை ஆறு புதுப்பாண்டி ஆறு மற்றும் பழம்பாண்டி ஆறு ஆகிய ஆறுகளில் முறை வைக்காமல் போதுமான அளவு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் போதுமான
அளவு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் எனவும்.

தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Link
மர்மமான முறையில் உயிரிழந்த குட்டி யானை

மர்மமான முறையில் உயிரிழந்த குட்டி யானை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
8 hrs 36 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved