Also Watch
Read this
By: Fyrose Banu

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் சோழவந்தான் செல்லக்கூடிய முக்கிய சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மதுப்பிரியர்கள் மதுக்கடை அருகே உள்ள கடையில் தின்பண்டங்களை வாங்கி அங்கேயே உட்கார்ந்து மது அருந்திவிட்டு ச் ஏற்பட்டு வருகிறது.
அரசு மதுபான கடையால் தொடரும் விபத்து
இந்த நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், கலையரசி தனது குடும்பத்தாருடன் நிலைக்கோட்டை பகுதி அருகில் உள்ள அணைப்பட்டி பகுதி ஆஞ்சநேயர் கோயில்லுக்கு சென்று விட்டு ஆட்டோவில் திரும்புயுள்ளனர். தினேஷ் குமார் மற்றும் 11 வயது மகன் புகழ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் படுகாயம்
அப்போது இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த 3 இளைஞர்கள் எதிரே வந்த தினேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த தினேஷ் குமார் மற்றும் அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமயநல்லூர் சோழவந்தான் செல்லக்கூடிய இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாகவும், குண்டும் குழியுமாக இருப்பதாலும் அங்கு செயல்பட்டு வரும் மதுபான கடையால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved