நாமக்கல்லில் உள்ள ஸ்பைரோ பிரைம் கல்வி நிறுவனத்தில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சமையலறை கூடத்திற்கு சீல் வைத்தனர். இந்த நிறுவனத்தில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவிகள் 20 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.