காஞ்சிபுரம் குமரகோட்டம் முருக சுவாமி கோவிலில் தை மாதத்தின் மூன்றாம் வார செவ்வாய்க்கிழமையையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணிய சுவாமி வெள்ளி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வயானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.