news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து
tv

Also Watch

சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

ஆவடி, திருவள்ளூர்

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Bus accident

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து :

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் இருந்து 20கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செய்வாய் கிழமை விசேஷம் என்பதால் சுற்றுலா பேருந்தில் வந்துள்ளனர்.

சுற்றுலா பேருந்தை மோகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.ஓட்டுநர் மோகன் தூக்ககலக்கத்தில் ஆவடி வெல்டெக் கல்லூரி அருகே வேகமாக வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து
சாலை தடுப்பில் பேருந்து மோதி உள்ளது.

இதில் உருக்குலைந்த பேருந்து முன் சக்கரம் உடைந்து துண்டான நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது பேருந்தில் இருந்த முன்பக்க கண்ணாடி உடைந்து அதன்
வழியாக கை குழந்தையுடன் ரிவேகா என்ற பெண் வெளியில் வந்து விழுந்துள்ளார்.

இதில் கை குழந்தை சேற்றில் விழுந்த நிலைகள் அப்பெண் அங்கிருந்த பாறை கல்லில் தலை மோதி ரிவேகா சம்பவ இடத்திலேயே பலி உயிரிழந்துள்ளார்.உடனடியாக அவ்வழியே சென்ற
வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பத்திரப்படுத்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் போக்குவரத்து ஆய்வாளர் பரந்தாமன், டேங்க் பேக்டரி போலீசார்
காயமடைந்தவர்களை மீட்டு பாடியநல்லூர்,ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உரியிழந்த ரிவேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தூக்க கலக்கத்தில் சுற்றுலா பேருந்தை இயக்கி விபத்தில் பெண் பலியான நிலையில் 10கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
நந்தியாற்றை ஆக்கிரமித்து சுவர் கட்டிய எஸ்டேட் உரிமையாளர்

நந்தியாற்றை ஆக்கிரமித்து சுவர் கட்டிய எஸ்டேட் உரிமையாளர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved