Also Watch
Read this
By: Manigandan Raja

சுவர் கட்டிய எஸ்டேட் உரிமையாளர் :
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தியாற்றை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டிய எஸ்டேட் உரிமையாளர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாறயக்கடவு பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட் உரிமையாளர் ஜோணி என்பவர், ஆற்றின் நீரோட்ட பகுதியை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுப்பணி துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய மக்கள்.
அப்பகுதியை அளவீடு செய்து ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை மீட்டு ஆற்றின் நீரோட்ட பாதையை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved