கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டிக்கு எதிராக மாணவியின் தயார் செல்வி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பில் ஆட்சபேனை இருந்தால் பிப்ரவரி 20ம் தேதி தெரிவிக்கலாம் என நீதிபதி ஸ்ரீராம் தெரிவித்தார்.