news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் வெற்றி பெற முடியாது
tv

Also Watch

விஜய் வெற்றி பெற முடியாது

இரு பெரும் கட்சிகளை எதிர்த்து...

58

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக, அதிமுக என, இரு பெரும் கட்சிகளை எதிர்த்து, தவெக தலைவர் விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில், பிரஷாந்த் கிஷோர் நிலையே ஏற்படும் என்று, சி-வோட்டர் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் யஷ்வந்த் தேஷ்முக் கூறி உள்ளார்.

விஜய், ரஜினி...
இதுதொடர்பாக, சி-வோட்டர் கருத்து கணிப்பு நிறுவனத்தின், யஷ்வந்த் தேஷ்முக் கூறி இருப்பதாவது;
தனித்து போட்டியிட்டால், விஜய் வெற்றி பெறப் போவது இல்லை. ரஜினிகாந்த் அரசியலில் நுழைய முற்பட்ட போது, நாங்கள் நடத்திய சர்வேயில் 16, 17 சதவீத வாக்குகள் பெறுவார் என்பது தெரிந்தது. ஆனால், விஜய் 15, 16 சதவீதத்தைக் கூட தாண்டப் போவது இல்லை.

ஒரு தொகுதியில் கூட...
தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட விஜய் வெல்லப்போவது இல்லை. ஒருவேளை கூட்டணி அமைத்தால் மிகப் பெரும் திருப்பு முனையாக இருக்கும். திமுக - அதிமுக இடையே வாக்கு சதவீதம் 5 சதவீதத்திற்கும் கீழ் தான் உள்ளது.

பிரசாந்த் கிஷோர் கதி தான் விஜய்க்கு...
தவெக தலைவர் விஜய், அதிமுக உடன் கூட்டணி சேர்ந்தால் முற்றிலும் வேறுபட்டதாக, தமிழக தேர்தல் களம் மாறிவிடும். ஆனால், அவர் தொடர்ந்து, தனித்தே போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதி தான் விஜய்க்கு ஏற்படும். 15 சதவீதம் வாங்கினால் கூட அவரால் வெல்ல முடியாது.
இவ்வாறு யஷ்வந்த் தேஷ்முக் கூறி உள்ளார்.

தேர்தல் களத்தில் பிரஷாந்த் கிஷோர்
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளாரான பிரசாந்த் கிஷோர், ஜன்சுராஜ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட ஜன்சுராஜ் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிரசாந்த் கிஷோரே படுதோல்வியை சந்தித்தார். வெறும் 3.44 சதவீத வாக்குகளே பிரசாந்த் கிஷோர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved