உல்லாசமாக ஊர் சுற்ற சொந்த பாட்டியையே கொலை செய்து நகையை திருடிய பெண், தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இ.பி. நகர் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சிந்தாமணியை, ஆண் நண்பர் கொடுத்த ஐடியாவின் படி பேத்தி மதுமதி தலையில் தாக்கிவிட்டு நகையை அபகரித்து சென்றார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி பாட்டி உயிரிழந்தார்.