கோவில் வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளைஞர். வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 2 இளைஞர்களிடம் விசாரணை. உடன் சுற்றிய நண்பனே இளைஞரை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தது அம்பலம். நண்பனே இளைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்தது ஏன்? கொலைக்கான நோக்கம் என்ன? கொலையாளி பிடிபட்டானா? நண்பர்களுடன் தினமும் மது அருந்திய மணிகண்டன்சேலம், மேட்டூர் பக்கத்துல உள்ள பெரியண்ண கவுண்டர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். 23 வயசான இந்த இளைஞர் பெயிண்டிங் வேலை, கட்டிட வேலைகள் பாத்துட்டு இருந்துருக்காரு. காலையில வேலைக்குப்போனா மாலையில அந்த பணத்தவச்சி தினமும் நண்பர்களோட சேர்ந்து மது அருந்துறது வழக்கம். அதுலயும் குறிப்பா மேட்டூர் திலீபன் நகரை சேர்ந்த 19 வயசான இளைஞர் முத்துதான், மணிகண்டனுக்கு பெஸ்ட் பிரண்ட். அவரோட சேர்ந்து தினமும் மது அருந்துவாரு மணிகண்டன். அப்படிதான், முத்துவும், மணிகண்டனும் மது வாங்குறதுக்காக டாஸ்மாக்குக்கு போயிருக்காங்க. அங்க, இருந்த இன்னும் ரெண்டு நண்பர்களும் நாங்களும் உங்களோட சேர்ந்து மது குடிக்க வர்றதா சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு, மதுபாட்டில்களை வாங்கின நாலுபேரும் ரெண்டு பைக்ல நேதாஜி நகர் வனப்பகுதியில உள்ள அங்காளம்மன் கோவில் வனப்பகுதியில உள்ள சின்ன மலைக்குன்றுக்குபோய்ருக்காங்க.முத்துவுக்கும் மணிகண்டனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்நாலுபேரும் சேர்ந்து மது குடிச்சிட்டு இருக்கப்ப, எப்ப பாரு என் பணத்துலயே மது குடிக்கிற? நீயும் பணம் கொஞ்சமாவது செலவு பண்ணுனு முத்துக்கிட்ட சொல்லிருக்காரு மணிகண்டன். அதுக்கு, நானா குடிக்க வரேனு சொன்னேன், நீயாதானே கூப்பிட்டனு கோபப்பட்ட முத்து மதுபாட்டிலை தூக்கி வீசிருக்காரு. அதனால, ஆத்திரப்பட்ட மணிகண்டன் ஓசியில மது குடிக்கிற உனக்கு அவ்ளோ திமிரானு பேசிருக்காரு. இப்படி மாறி மாறி ரெண்டுபேரும் பேச வாக்குவாதம் எல்லைமீறி போயிருக்குது. கூட இருந்த ரெண்டு நண்பர்களும் ரெண்டுபேரையும் அமைதியாக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, ரெண்டுபேருமே பேச்ச கேக்குறமாதிரி தெரியல. இதுக்குமத்தியில கோவத்தோட உச்சிக்குப்போன முத்து, மலைக்குன்றுல கிடந்த ஒரு உருட்டுக்கட்டைய எடுத்து மணிகண்டனோட முகம், தலையில கடுமையா தாக்கிருக்காரு. அதுல, சம்பவ இடத்துலயே உயிரிழந்துட்டாரு மணிகண்டன். அதபாத்து அதிர்ச்சியான கூட இருந்த நண்பர்கள் அரக்க பறக்க அங்க இருந்து ஓடிப்போய்ருக்காங்க. அதேமாதிரி, முத்துவும் கட்டைய அங்கேயே வீசிட்டு ஓட்டம் பிடிச்சிருக்காரு.வனப்பகுதியில் சுற்றிய மணிகண்டனின் 2 நண்பர்கள்இதுக்கு மத்தியில பொதுமக்கள் தகவல் குடுத்ததும் அங்க வந்த போலீசார், வனப்பகுதியில சுத்திட்டு இருந்த மணிகண்டனோட நண்பர்கள் ரெண்டுபேரை பிடிச்சி விசாரிச்சிருக்காங்க. அப்பதான், கொலைக்கான காரணம் தெரியவந்துச்சு. ஆனா, தப்பி ஓடுன முத்து போலீஸ் கண்ணுல இன்னும் சிக்கல. அதனால, கொலையாளியை பிடிக்கிற வேலையில தீவிரமா இறங்கிருக்காங்க போலீசார். இதுஒருபக்கம் இருக்க, கொலை நடந்த இடத்துல கள்ளச்சந்தையில மது விற்பனை நடக்குறதாகவும், அந்த மதுவை குடிச்சிட்டு அடிக்கடி பல பிரச்சனைகள் நடக்குறதாகவும் சொன்ன மக்கள், கள்ளச்சந்தையில மது விற்பனையை தடுத்தாதான் இதுபோன்ற கொலைகளையும் தடுக்க முடியும்னு சொல்லிருக்காங்க. Related Link வார்னிங்கை மீறி தகாத உறவு