7 மாவட்ட போலீசாருக்கு போக்குக்காட்டி வந்த முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் தூத்துக்குடியில் பிடிப்பட்டனர். கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த வாரம் ஆள்நடமாட்டம் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி சென்றனர். மர்மநபர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை, 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கார் ஒன்று நிற்காமல் செல்ல போலீசார் அதனை மடக்கி பிடித்து அதிலிருந்த சாந்தகுமார் சிவக்குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.