Also Watch
Read this
Posted on: Oct 17, 2025 06:22 AM
By: Web Team

சென்னை உயர்நீதிமன்றம் அருகே, விசிக தலைவர் திருமாவளவன் காரும், வழக்கறிஞரின் பைக்கும் மோதிய விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில், பார் கவுன்சில் துணைத் தலைவர் அருணாச்சலம் மற்றும் சரவணன் அடங்கிய இரு நபர் விசாரணை குழு அமைத்துள்ளதாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார். 2 வாரத்தில் விசாரணை நடத்தி பார்கவுன்சில் பொதுக்குழுவிடம் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமல்ராஜ் கூறினார். விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்னொரு தரப்பு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved