Also Watch
Read this
By: Manigandan Raja

முருகன் கோவில் தேரோட்டம் :
முருகன் தெய்வானை தங்கஅங்கி அலங்காரத்தில் திருத்தேரில் பவனி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 14 நாள் நடைபெறும் பங்குனி திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார் இதனை தொடர்ந்து 1 ம் தேதி பங்குனி உத்திரமும் 2ம் தேதி சூரசம்ஹார லீலையும். 3ம் தேதி பட்டாபிஷேகமும் 4ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.கோவிலிருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் தங்க அங்கி அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் 5.30 மணிக்கு எழுந்தருளினர்.
இந்த தேரோட்டத்திற்கு பொதுமக்கள் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராமத்திற்கு அழைப்பின்பேரில் கிராமபொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 6 மணிக்கு புறப்பட வேண்டிய தேர் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டது.
திருத்தேர் கீரிவீதி வலம் வந்து போது சிவபக்தர்கள் மேளதாளங்களுடன் வந்தனர் சில பெண் பக்தர்கள் பக்திபரவசத்துடன் சங்கு ஊதி வந்தார்கள் வழிநெடுகிலும் நீர் மோர் பந்தல்,
அன்னதானம் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கி,வந்தனர்.
திருத்தேர் பஸ் நிலையம் அருகே வந்தபோது தேரின் வலதுபுற சக்கரம் பாதளச்சக்கடை மூடியின் மேல் ஏறியதால் பாரம் தாங்கமால் தேர் பள்ளத்தில் சிக்கியது. இதனால் தேர் 30 நிமிடத்திற்கு பிறகு இரும்பு தகடுகள் வைக்கப்பட்டு தேரியை மீட்டு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.
தேர் மலைக்கு செல்லும் பாதை யில் உள்ள பெரிய ரதவீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் பள்ளிவாசலில் தேரோட்டம் வந்த பொதுமக்கள், பக்தர்கள் நீர்மோர் வழங்கினார்கள் தற்பொழுது எற்ப்பட்டு பிரச்சைகள் இடையே இதுபோன்ற நடைபெற்றது மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக இருந்தது.
இதன் பின்பு தேர் 12.25 மணிக்கு தேர் நிலைக் வந்தடைந்தது. இத்துடன் 14 நாள் பங்குனி திரு விழா முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சத்தியபிரியா அறங்காவலர்கள் மணி செல்வம் பொம்மத் தேவன் சண்முகசுந்தரம் ராமையா கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் ஆகியோர் மற்றும் ஸ்தனிகப்பட்டர்கள் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பான பணி செய்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved