Also Watch
Read this
By: Manigandan Raja

பூங்கா அருகே தவெக நிகழ்ச்சி :
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கத்தில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரியை சுற்றி பொது மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு பாதைகள் அமைக்கப்பட்டதோடு சிறுவர்கள் விளையாடப் பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
காலை மாலை நேரங்களில் தாராளமானவர்கள் இந்த ஏரியில் நடைபெற்று மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று தினம் மாலை 5 மணி அளவில் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக
ஏராளாமானகள் பூங்காவிற்கு சென்றவர்கள் நடைப்பயிற்சி முடித்த நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக பூங்காவை விட்டு வெளியே வரும்போது பூங்காவின் கேட் பூட்டப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் பூங்காவின் கேட் திறக்காத காரணத்தால் ஆபத்தான முறையில் பெண்கள் வயதானவர்கள்
சிறுவர்கள் என ஏராளமானவர்கள் வேலியை தாண்டி வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனை பார்த்தா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக கேட்டின் சாவியை எடுத்துவரப்படி கூறி சாவியை வைத்து பூங்காவின் கதவை திறந்து வைத்தார்.
அப்பொழுது பூங்காவிற்கு வந்தவர்கள் பூங்கா அருகாமையில் தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் இந்த பூங்காவின் கதவு மூடப்பட்டது என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
மேலும் பூங்காவில் பணி புரியும் மாநகராட்சி ஊழியர் பூங்காவின் கதவை மூடிவிட்டு சாவியை எடுத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved