Also Watch
Read this
By: Manigandan Raja

ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் :
ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது
இந்த நிலையில் இன்று வைகாசி மாதம் அமாவாசை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு தம்மோடு வாழ்ந்த மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர்.
பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடிவிட்டு சாமி மற்றும் அம்பாளை தரிசித்து செல்கின்றனர் மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்ற செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நான்கு ரத வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved