தவெக தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தவெகவில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் வருவதால், விஜய் கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அவரது அரசியல் கேள்வியாகும் என்றார். அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைவது எந்த அளவுக்கு உறுதியானது என தெரியவில்லை என்றவர், செங்கோட்டையன் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.